Wednesday, September 4, 2013

என் வாழ்வின் தங்க மீன்கள்...

கையைப் பிடித்து நடக்கும் ஒருத்தி
கழுத்தில் ஏறி குதிக்கும் ஒருத்தி

நான் விரும்பியதை தான் செய்யும் ஒருத்தி
தான் விரும்பியதை நான் செய்யும் ஒருத்தி

என் தட்டில் தினம் உண்ணும் ஒருத்தி
தன் தட்டில் பிறர்க்க்ளிக்கும் ஒருத்தி

என் துன்பத்தை தன் துன்பமாக ஏர்க்கும் ஒருத்தி
தன் இன்பத்தை என் இன்பமாக மாற்றும் ஒருத்தி

மௌனத்தை மொழியாக்கி கொண்ட ஒருத்தி
மழலையை மொழியாக கொண்ட ஒருத்தி

என் பேரை மட்டுமே உச்சரிக்கும் ஒருத்தி
கேள்விகள் கேட்டே நச்சரிக்கும் ஒருத்தி

தாய்க்கு நிகரான தாரமாய் ஒருத்தி
தாரத்தை தாயாக மாற்றிய ஒருத்தி

என் இறப்பிலும் உடனிருக்கும் ஒருத்தி
ஏழேழு பிறப்பிலும் கிடைக்காத வரமாய் ஒருத்தி

இவர்கள் இருவரும் தான்,

என்றென்றும்,
என் வாழ்வின் தங்க மீன்கள்

No comments:

Post a Comment