அம்மா,
இந்த வார்த்தை உதித்த அடுத்த நொடியில்,
நான் இருப்பேன் உந்தன் மடியில்.
இருப்பேனோ மரணப்பிடியில்,
இறந்தாலும் வீழ்வேன் உனது நிழலடியில்.
நான் தழைப்பதோ நீ தரும் அன்பால்,
மறவேனோ நீ எனக்களித்த தாய்ப்பால்...
என்னை கருவாக்கினாய்,
பத்து திங்கள் உன்னுள் சுமந்து உருக்கினாய்,
நான் கண்ட கனவுகள் அனைத்தையும் நினைவாக்கினாய்,
சுறுக்கமாகச் சொன்னால்,
என்னை நான் ஆக்கினாய்...
இவ்வுயிர் நீத்தாலும்,
மண்ணில் உயிர் வாழும் வரை
என் நன்றிகள் உன்னைத் தொடரும்...
No comments:
Post a Comment