Hi ppl,
Glad to write something in தமிழ். Its been a very long time since i wrote something new. today evening I was watching TV casually. While scanning the channels, I came across a கவியரங்கம்(Tamil Poetry Show) in a channel. It was headed by Vairamuthu, who is one of my favorite writers just as for many others. I always used to admire his speeches. Today the topic was a very old but ever existing one, "LOVE". the most enchanting factor was that the backdrop of the show was the set of "THE TAJMAHAL", which is the symbol of love. there were 6 people who had come to recite poems on the topic. It was Vairamuthu who began. I have no words to explain his poem. Then the next person started reciting. Befor he could finish, was urged from inside to write. Its been a long time since I got such a feel. So, without hesitation, I started scribbling what all I felt. To be frank, the following lines of me were inspired by the two poems I heard in the show. I just put the thoughts I had in my own way. Hope you will enjoy reading.. Suggestions welcomed.
என் காதலியே,
உன்னை நினைத்து எழுதினால் வரிகள் கூட வைரங்களால் நிரம்புகின்றன...
இதோ,
அந்த வைரங்களில் சில, உனக்காக...
உன்னை சிலர் நிலவோடு ஒப்பிட்டார்கள்.
முட்டாள்கள்.
நிலா சூரியனிடமிருந்து ஒளிப்பெற்று உலகிற்களிக்கும்.
ஆனால்,
உன் கடைக்கண் பார்வை ஒன்றே பல்லாயிரம் சூரியன்களுக்கு சுடரளிக்கிறதே...
பிறர் முகத்தில் கரியைப் பூசுவது தானே ஏமாற்றுவது என்று அர்த்தம்.
ஆனால் நீயோ,
உன் முகத்திலேயே பூசிக்கொண்டு நீ அழகில்லை என்று என்னை ஏமாற்றுகிறாய்.
உன் கண்மையைச் சொன்னேன்..
இறப்பு எப்பொழுது வரும்,
இறந்தப்பின் என்ன ஆகும்,
யாரும் அறியார்...
உன் மீது நான் கொண்ட காதலும் அப்படித்தான்...
உன்னால் நான் பலவற்றை இழந்தேன்.
கவலை, கண்ணீர், தனிமை...
இழந்த பின்னும் பாரம் குறையவில்லை.
மாறாக கூடியது.
காரணம்,
அவற்றை அகற்றிவிட்டப்பின் தோன்றிய வெற்றிடத்தை
உன் காதலால் நிரப்பிவிட்டாய்.
கனம் அதிகம் தான்.
இருப்பினும் சுமக்கிறேன்,
சுமையாய் அல்ல
சுகமாய்...
நீ அழகி என்றேன்,
ஏளனமாய் சிரித்தார்கள்.
அவர்களுக்கேன்னே தெரியும்,
உன்னைக்கண்ட நொடி முதல்
என் நிழல் கூட என்னை விட்டு உன்னைத் தொடர்வது...
மழை வருவதறிந்து மயில் ஆடுமாம்.
இங்கோ,
நீ ஆடுவதைக்காண மழையே மண்ணிற்கு விரைகிறது...
இறுதியாக,
கடலின் கவனக்குறைவுக்கு நன்றி.
இப்படி ஒரு முத்து கடலிலிருந்து வெளியேறி
என் கரங்களில் சேர்ந்து விட்டது.
உன்னை என் இதயச் சிப்பியில் வைக்கிறேன்
உயிருக்கு பதிலாக...
Beautifully made..
ReplyDeleteThe girl is very gifted..
Yaaru athu???
unaku dhan adhu first therium... kavala padadhe...
ReplyDelete