காதலி,
எனக்கு இரண்டாம் முறையாக கருவறை சுகம் தந்தவள் நீ...
உன் இதயத்தில் என்னை கருவுற்று சுமந்தாய்.
என் வாழ்வின் தலைசிறந்த தருணங்கள்
உன்னுடன் நான் இருந்தவை தான்...
அனைவரும் காதலிக்கு ரோஜாவைத்தான் பரிசளிப்பார்கள்,
நானோ முட்களை கொடுத்தேன்...
ஏனென்றால் எனக்கு மட்டும் தானே தெரியும்
இந்த உலகத்தின் தன்னிகரில்லா ரோஜா நீ என்று.
உன்னை பாதுகாக்கவே இந்த புதுமையைச் செய்தேன்...
பருவப்பெண்ணுக்கும் பங்குச்சந்தைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
பங்குச்சந்தையில் போட்டது திரும்பினால் மகிழ்ச்சி.
பருவப்பெண்ணிடதிலோ,
போட்டது திரும்பாவிடின் மகிழ்ச்சி...
அங்கே போடுவது பணம்
இங்கே மனம்...
உன்னில் என் மனதை முதலீடு செய்கிறேன்
அதன் மதிப்பை பன்மடங்காக மாற்றுவாய் என்ற நம்பிக்கையுடன்.
காத்திருக்கிறேன் காதலுடன்...
No comments:
Post a Comment